Category: தேர்தல் களம்


நாம் செழித்து உள்ளத்

தொகுதிகளைப்;

பகுதி வைத்து

நம் சேர்க்கையைப்

பங்குவைத்துப்

பந்திப் படைக்கும்

தேர்தல் களம்!

ஒன்றுப்பட்டு

விரல் நீட்டி;

மைப் பூசிய விரலாலே

எதிரிகளின் முகத்திற்குக்

கரிப்பூசி நம் முகம் சிரிக்க

வாய்ப்புகள் உண்டோ; Continue reading

அஸ்பர் (பலாஹி)

இஸ்லாமிய மார்க்கம் உலக மக்கள் அனைவர்களுக்கும் தேவையான உயரிய வழிகாட்டல்களையும் நேர்த்தியான போதனைகளையும வழங்கியுள்ளது. எச்சில் துப்புவது முதல் ஆட்சி செய்யும் வரை மனித குலத்திற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கியுள்ளதை இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களை படித்துப் பார்க்கும் போது ஒருவர் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறான போதனைகளை வழங்கும் இஸ்லாம் ஆட்சி, அதிகாரம், தலைமைத்துவம் தொடர்பாகவும் மிக நேர்த்தியான உபதேசங்களை வழங்யுள்ளதைக் காணலாம்.

அதிகாரத்திற்கு வருபவர்கள்; எப்படி இருக்க வேண்டும் அவர்களைத் தெரிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற விடயங்களை இஸ்லாம் மிக அழகாக குறிப்பிடுகின்றது.

பொறுப்பு  அதிகாரம் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

01. – அழ்ழாஹ்வின்மீதுதவக்குல்வைத்தல்:-

அழ்ழாஹ்வை நம்பிய ஒரு விசுவாசி எந்தவொரு காரியமாக இருந்தாலும் இறைவன் மீது தவக்குல் வைத்து அக்காரியத்தில் இறங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனையாகும்.

திருமறை குர்ஆனில் இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
“எவர் அழ்ழாஹ்வின் மீது (தன் காரியத்தை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாறோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்.” (65:3)

தலைமைத்துவ பொறுப்பை சுமப்பதற்கு தயாராகும் ஒருவர் முதலில் இறைவனிடம் தவக்குல் வைத்து தான் அதற்குத் தகுதியானவானா என்பதை கவனத்திற் கொள்ளும் அதே வேளை அந்தப் பொறுப்பை தன்னால் இறைதிருப்தியின்; அடிப்படையில் மேற்கொள்ள முடியுமா என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் தலைமைத்துவம் தொடர்பில் இஸ்லாம் கூறக்கூடிய போதனைகள் மிகக் கடுமையானது என்பதே அதற்குக் காரணமாகும். ஆகவே தலைமைத்துவ பொறுப்புக்கள் தொடர்பாக இஸ்லாம் கூறக்கூடிய செய்திகள் தொடர்பில் ஒரு விசுவாசி விழிப்பாக இருக்க வேண்டும்.

02. – மறுமையில் விசாரணை செய்யப்படல்:-

பொதுவாக ஒருவர் ஒரு பொறுப்பை சுமப்பதற்கு தயாராகும் போது குறித்த பொறுப்பை  செய்வதற்கு தன்னால் முடியுமா என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் பொறுப்பு என்பது நாளை மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய ஓர் அமானிதமாகும்.

அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். Continue reading

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம்“காத்திருந்த மாற்றம்” இது. இன்று காலை 8.00மணிக்கு இது பொதுமக்களுக்காக விநியோகிக்கப்படுகிறது.

 

எதிர் வரும் 17ஆம் திகதி நடை பெறப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகரசபைக்கான ஆட்சியினை இன்ஷா அல்லாஹ் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் அத்தோடு எதிர்கட்சியாக PMGG யா / UPFA யா என்பதை மக்கள் இறுதி நேரம் தான் தீர்மாணிப்பார்கள்.

இவ்வாறு காத்தான்குடி நகர சபைக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 6ஆம் இலக்கத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் இல்மி அஹமட’ லெவ்வை JP தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிறந்த மண் காத்தான்குடி அதனை மீண்டும் வளர்தெடுக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது. நானும் அதன் ஆரம்பப்போராளி என்ற வகையில் நானும் அதன் அணியில் இப்போது போட்டியிடுகிறேன்.

நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு எங்கள் அணிக்கு பெருகிக்கொண்டு போகிறது. எனக்கும் அதிகமான ஆதரவு இருக்கிறது. போகின்ற இடமெல்லாம் என்னை ஆதரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

நான் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை இந்த ஊருக்காகச் செய்துள்ளேன். தற்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்திருந்த காலத்திலும் நான் அதிகமான பணிகளைச் செய்துள்ளேன்.

எனது குடும்பமும் அரசியலில் ஈடுபட்டு இந்த சமூகத்திற்காகவும் ஊருக்காகவும் நிறையவே சேவைகளைச் செய்துள்ளது.

நிறையவே திட்டங்களை தீட்டி வைத்துள்ளேன் இன்ஷா அல்லாஹ் நான் வெற்றிபெறும் பட்சத்தில் அவற்றை என்னால் நிறைவேற்றித்தர முடியும். என்றும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபைக்கு சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் இரண்டாவது பொதுக்கூட்டத்தினை இன்று நடாத்தியது.

காத்தான்குடி பிரதான வீதி குர்ஆன் சதுக்கத்தில் இன்று மாலை இக்கூட்டம் MS அமீரலி ஆசியர் தலைமையில் நடைபெற்றது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்களான ALM. சபீல் நழீமி, Dr. ILM. றிபாஸ், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், MBM. பிர்தௌஸ் நழீமி ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தினர்.

விசேட உரை நிகழ்த்திய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அதிஉயர்பீட உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான தனதுரையில்;

கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற பெயரில் நமது ஊரில் பல அநியாயங்களும் தில்லுமுல்லுகளும் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக நகர சபை நிருவாகத்திலும் பல ஊழல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறு அநியாயங்களையும், ஊழல்களையும் செய்தவர்களை நாம் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய போது அதனைக் கவனத்திற் கொள்ளாது அநியாயம் செய்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்துவிட்டு இப்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் எங்களை விசர்சிக்கின்றார்.

நாங்கள் ஊழல் செய்வதாக கூட்டம் போட்டுச் சொல்கின்றார். உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கேட்கின்றார்?.

“நீங்கள் செய்த ஊழல்களுக்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் நாங்கள் பேசுகின்றோம். முடிந்தால் ஒரு நேரடி விவாதத்திற்க வாருங்கள் பொது மேடையமைத்து நீங்களும் நாங்களும் பேசுவோம். மக்களுக்கு உண்மைகளை தெளிவுபடுத்துவோம்” என்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்டபாளர்கள் அவர்களது போஸ்டர்களை ஆங்காங்கு ஒட்டிவருவதுடன், அவர்களது கட் அவுட்களையும் குறித்த இடங்களில் வைத்துவருகின்றனர். அத்தோடு தேர்தல் அலுவலகங்களையும் திறந்து வைத்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

HMM. பாகீர் ஆசிரியரின் கட்அவுட் உடைப்பு:-

காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) கட்சிச் சார்பில் போட்டியிடும் HMM. பாகீர் ஆசியர் அவர்களினால் புதிய காத்தான்குடி மத்திய வீதியில் அவரது வீட்டுக்கு முன்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

இந்த அலுவலகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பாக்கீர் ஆசிரியரின் பெயர் தாங்கிய கட் அவுட் நேற்று இரவு இனந் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

இதே அணியில் போட்டியிடும் றஊப் ஹாஜியாரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு மேலாக பாகீர் ஆசிரியர்களின் ஆதரவாளர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக நேற்று ஒரு முறுகல் நிலை இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பாக SLMC சார்பில் போட்டியிடும் இல்மி அஹமட’ லெவ்வை JP அவர்களிடம் எமது இணையத்தளம் சார்பாக கருத்து வினவிய பொது;

“காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் பாகீர் ஆசிரியர் அவர்களின் புதிய காத்தான்குடி அலுவலகத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த கட்அவுட் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டதை அறிந்து நான் மிகவும் அதிர்சிசியடைந்தேன்.

யாராக இருந்தாலும் இவ்வாறான அநாகரீகமான செயல்களை செய்வதை முற்றாக நிறுத்த வேண்டும் அரசியல் என்பது அவரவர்களின் ஜனநாயக உரிமை, கருத்தை கருத்தால் வெல்லலாம் அதைவிடுத்து அவர்களின் போஸ்டர்களைக் கிழிப்பதும், கட்டஅவுட்டுக்களை உடைப்பதும் மிக மேசமான செயலாகும். நான் மாற்றுக் கட்சி வேட்பாளனாக இருந்தாலும் இவ்வாறான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” என தெரிவித்தார்.

வட்டிவாங்குவது சாராயம் குடிப்பது அடுத்தவனின் சொத்துக்களை அபாண்டமாக சூறையாடுவதும் எப்படி இஸ்லாத்தின் பார்வையில் ஹறாமானதோ அதே போன்றுதான் அடுத்த சகோதரனின், சகோதரியின் வாக்குரிமையை  பயன்படுத்துவதும் அதாவது கள்ளவாக்களிப்பதும் இஸ்லாத்தின் பார்வையில் ஹறாமான செயலே என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் MBM. பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி தெற்கு 167ஊ கிராம சேவையாளர் பிரிவில் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே பிர்தௌஸ் நழீமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எப்படி நாம் ஒவ்வொருவரும் எமது வீட்டு நிருவாகத்தை நேர்த்தியாகக் கொண்டு செல்ல விரும்புகின்றோமோ எப்படி நமது வயது வந்த பெண் பிள்ளைக்கான சிறந்த கணவரை  மிகக் கவனமாக தெரிவு செய்கின்றோமோ அவை போன்று எமது முழு ஊரையும் ஆழ்வதற்கான அதிகாரமிக்க தரப்புக்களை தெரிவு செய்வதில் நாம் கவனம் செலுத்துவதில்லை.

இதனால் தான்  இன்று நாம் எமதூரில் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்கின்றோம். வாக்களிப்பு என்று வந்து விட்டால் அதன் பாரம் நமக்கு விழங்குவதில்லை பெண்களாகிய உங்களைப் பயன்படுத்தியே நமதூரில் அதிகமான கள்ள வாக்குகள் போடப்படுகின்றன. இந்த செயலை நாம் செய்யக் கூடாது.

மிக கவனாக இந்த ஊரை நினைத்து உங்கள் கைகளில் இருக்கின்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மிகச்சரியானவர்களை எதிர்வரும் தேர்தலில் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த நாட்டிற்கே முன்மாதுரி மிக்க ஊராக எமதூரில் மாற்றம் ஒன்றை தோற்று விக்க முடியும். இந்த அறைகூவலுடன் தான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உங்கள் முன்னால் வந்துள்ளது இவ்வாறு பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபைக்கு  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வொன்று இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பினை  நேற்று காத்தான்குடி பிரதான வீதியில் வேட்பாளர்கள் சிலரும் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிலரும் கடைகடையாகச் சென்று விநியோகித்தனர்.

அழைப்புக்களைக் கொடுத்த வேட்பாளர்கள் சிலர் கட்சியின் சின்னத்திற்கும் தங்களது விருப்பு இலக்கத்திற்கும் போடுப்படி தாழ்மையாக கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அழைப்புக்களை விநியோகிப்பதற்காக வீதிக்கு வந்த  வேட்பாளர்கள் ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்பில் செயற்படவில்லையென்று அழைப்பினைப் பெற்றுக் கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது இரண்டாவது நகர சபையின் நகர முதல்வர் பதவி அப்துர் றவூப் றவூப் மௌலவி தரப்பு வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளர் ஜெஸீம் அவர்களுக்கே வழங்கப்படும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் பிரகடப்படுத்தியுள்ளார்.

காத்தான்குடி 05ம் குறிச்சி பதுரிய்யா ஜும்ஆப்பள்ளிவாசல் பிரதம நிர்வாகியும், பிரபல உலமாவுமான மௌலவி A. அப்துர் றவூப் (மிஸ்பாஹி) அவர்களின் 68வது பிறந்த நாள் விழா கடந்த 05ம் திகதி சனிக்கிழமை இரவு அப்பள்ளிவாயல் வளாகத்தில் அதி விமரிசையாக நடைபெற்றது.

இதன் போது அங்கு வருகைதந்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மௌலவி அவர்களின் பிறந்த நாள் பரிசுச் செய்தியாக இச்சுபச் செய்தியை வேட்பாளர் ஜெஸீம் அவர்களிடம் உறுதிப்படுத்தித் தெரிவித்ததுடன், மௌலவி அப்துர்றவூப் அவர்களிடமே இவ்வூரில் மிகச் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு உள்ளதென்றும், அதனால் நகர முதல்வர் பதவியை அத்தரப்பினருக்கே வழங்க வேணடுமென தனது அதியுயர் அரசியல் ஆலோசகர்கள் பலரும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக தனது பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய மௌலவி அப்துர் றவூப் மிஸ்பாஹி அவர்களும் தமது ஆதரவாளர்கள் அனைவரும் எதிர்வரும் தேர்தலின்போது தன் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஜெஸீம் அவர்களுக்கே ஒவ்வொருவரும் தங்களுடைய மூன்று விருப்பு வாக்குகளையும் அளிக்க வேண்டுமெனவும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். Continue reading

வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான புவி.  றஹ்மத்துல்லாஹ் சற்று நேரத்திற்கு முன் இனந் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி அனாதை இல்லத்தில் ஒருவரை சேர்ப்பது தொடர்பாக இன்று மாலை  அங்கு சென்ற அவர் நிருவாகத்தினருடன் பேசிவிட்டு  அனாதை இல்லத்தின் வளாகத்தை விட்டு வெளியில் வந்தபோது இவர் மீது மிளகாய் தூள் வீசப்பட்டு;கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுளள்ளனர்

புவி றஹ்மத்துல்லாஹ் கடந்த பல வருடங்களாக அவரது வார உரைகல் பத்திரிகையில் ஊரில் நடக்கின்ற அநீதிகளுக்கும், ஊழல்களுக்கும் எதிராக எழுதி வருகின்றார்.

தற்போது இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதமும் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.