Category: காத்தான்குடி


காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர்காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் மைய்யவாடி காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை குறித்த காணியினை அண்மையில் வேலி
போட்டு அடைத்தது.

இது தொடர்பிலான வழக்கில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் அனைவரையும் கடந்த 18ஆம் திகதி செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் பிடியானை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை இவர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜராகினர். இதன்போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையம் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்தார்.அத்துடன் எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் ஜேர்மனிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர்காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் மைய்யவாடிக் காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்த வழக்கு தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர்களையும் 18ம் திகதி இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பியிருந்தது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் இந்த அழைப்பானை அனுப்பப் பட்டிருந்தது.

இந்த அழைப்பானைக்கு காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் அதன் உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரும் சமூகமளிக்கத்ததால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இவர்கள் இரவரையும் கைது செய்யுமாறு பிடியானை பிறப்பித்தார்.

கடந்த மே மாதம் 11ம் திகதி காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானதென கூறப்படும் மையயவாடிக்காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்துக் கொண்டிருந்த போது அவ்விடத்தில் பொதுமக்கள் திரண்டு வேலி போடுவதை தடுக்க முற்பட்ட போது அங்கு கலவரம் ஏற்பட்டது.

8காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக வெளியாகிய தகவலையடுத்து இன்று இரவு அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும் பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததையடுத்து மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும், இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிகின்றன.

தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும்,கலகத் தடுப்பு படையினரும்,போக்குவரத்து பொலிசாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பொது மக்களை பொலிசார், சிவில் உடை அணிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அப்பகுதி சுமூக நிலைக்கு திரும்பியுள்ளதாக பின்னர் கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த சம்பவத்தில் தகரங்கள் ,வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Continue reading

motor bikeமோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். எனினும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்கான பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் தெரிவித்தார்.

காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலில் இன்று நடைபெற்ற ஜும் ஆ தொழுகையின் பின்னர் பொதுமக்களுக்கு உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

breakingnewsகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் தாய் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் ஒருவர் காத்தான்குடி பொலிஸில் சரணடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதி பாவாலேனிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது தாயை வீட்டில் வைத்து தாக்கியும் அடித்தும்  காயப்படுத்தியுள்ளார்.  மகன் அடித்ததில் படுகாயமடைந்த தாயை அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். தாயை இவ்வாறு அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் புத்தி சுவாதீனமுற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

death newsஇன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் முதியவரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
காத்தான்குடி கடற்கரையில் முதியவரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  காத்தான்குடி 6ஆம் குறிச்சி ஜன்னத் மாவத்தையை சேர்ந்த அலியார் இப்றாகீம் (வயது 72) என்பவரது சடலமென்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

pisuruகாத்தான்குடி அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் காத்தான்குடி நகர சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற குப்பைகளை தரம் பிரித்து இயற்கை பசளை ஆக்கும் நிலையத்தை இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ‘பிலிசறு’ பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நேற்று சனிக்கிழமை பார்வையிட்டனர்.

இந்த நிலையத்தின் நிர்மாண வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ‘பிலிசறு’ பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இந்த நிலையத்தை பார்வையிட்டனர்.

மேற்படி உத்தியோத்தர்களுடன் காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் SHA. அஸ்பர், நிர்மாண வேலை அத்தியட்சகர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் இந்த நிலையத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டனர்.

இந்த நிர்மாண வேலைகள் தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்தும், இந்த திண்மக்கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தினை கிழக்கு மாகாணத்திற்குரிய திண்மக் கழிவு முகாமைத்துவ பயிற்சி நிலையமாக மாற்றுவது தொடர்பாகவும் தங்களது ஆலோசனைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் வழங்கியதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHA. அஸ்பர் தெரிவித்தார்.

1

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பல வீதிகளுக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி டெலி கொம் வீதி, புதிய காத்தான்குடி பதுறிய்யா ஜும் ஆ பள்ளிவாயல் வீதிகளுக்கே தெரு மின்விளக்குகள் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளன. இவ்வீதிகளில் நீண்டகாலமாக மின்விளக்குகள் ஒளிரமால் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் MIM.ஜெஸீம், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான HMM.பாக்கீர் மற்றும் M.அலிசப்ரி, MS.சியாத் ஆகியோரின் முயற்சியினால் இம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய காத்தான்குடியிலுள்ள பல பகுதிகளில் இவ்வாறான தெரு மின் விளக்குகளை பொருத்த திட்டமிட்டுள்ளதாக பதில் தவிசாளர் MIM.ஜெஸீம் தெரிவித்தார்.

 

MIM.ஜெஸீம்இந்தியாவில் இடம்பெறும் செயலமர்வொன்றில் கலந்துகொள்வதற்காக காத்தான்குடி நகர சபை தவிசாளர் SH.அஸ்பார் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியா பயணமானார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதில் தவிசாளராக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் MIM.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றார்.

DSC00252றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களின் கணிணி அறிவை மேம்படுத்துவதற்காக 03.01.2012 செவ்வாய்க்கிழமை பி.ப 04.30 மணியளவில் இக்கலாபீடத்தில் ‘‘கணிணிப்பிரிவு’’ ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் கலாநிதி அல்ஹாஜ் A. அப்துர் றவூப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ (தால உம்றுஹூ) மற்றும் சிறுவர் மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் M.A, காத்தான்குடி நகரபை பிரதி முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் JP, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட அதிபர் மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ, சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA மற்றும் உலமாக்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், ஜாமிஅஹ் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்திற்கு 10 கணிணிகளும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்​​​கை​ப் பொறுப்பிற்கு​​ மடிக் கணிணி ஒன்றும், ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்திற்கு கணிணி உபகரணங்களும் பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களின் வேண்டுகோளின் பேரில் பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் M.A அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

அ​தே போல் பிரதி நகர முதல்வரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் JP அவர்களினால் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்திற்கு அலுவலக தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டன.