புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்று முன்னர் அறிவித்ததுள்ளது.
இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.
மேலும்; ரமழான் மாத தலைபிறை இன்று காத்தான்குடியில் காணப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமழான் மாத தலைபிறையை காத்தான்குடியை சேர்ந்த நகர சபை உறுப்பினர் சபீல் (நளீமி) அவர்கள் கண்டதாகவும்; இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தானும் தனது குடும்பத்தாரும் ரமழான் மாத தலைபிறையை கண்டதாகவும், உடனே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை தொடர்புகொண்டு இதனை தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
மற்றும் இஸ்லாமிய நாடுகளில் நேற்று இரவு 08.07.2013 பிறை தென்படாததால், ஸஃபான் மாதம் 30நாட்களாக கணக்கிடப்பட்டு, 10.07.2013 புதன் கிழமை முதல் நோன்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.